03:46
0


எமது அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் அளவீ டுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அளவீடு இன்றி அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது சிரமம் எனுமளவிற்கு அளவீடுகள் நம் வாழ்வின்  செயற்பாடுகளில் பின்னிப்பிணைந்திருக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொதுவான அளவீடாக நீளத்தைக் குறிப்பிடலாம். தூரம்,உயரம்,அகலம், போன்றவையெல்லாம் நீளம் சார்பான அளவீடுகளேயாகும்.
பண்டைய நிறுத்தல் முறை 

மேலும் நாம் மாவு, சீனி போன்ற பொருட்களை கொள்வனவு செய்யும் போது திணிவுடனும், காலநிலை பற்றி பேசும் போது மறைமுகமாக வெப்பனிலை உடனும் தொடர்புறுவதன் மூலம் எமக்கும் அளவீட்டுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்திக் கொள்கிறோம். இவற்றையெல்லாம் விட அடிக்கடி பயன்படுத்தும் நேரமும் நம்மை அளவீட்டுடன் ஒரு புள்ளியில் இணைக்கிறது.


அளவீடு என்பது சூழலின் உள்ளடக்கத்துடன் அளவு ரீதீயாக கூறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அவ் அளவீடுகளின் வரலாறு மனித நாகரிகத்தை ஒத்த மிகவும் பழமையான வரலாறாகும்.

திணிவு,நீளம், நேரம்,வெப்பநிலை, மின்னோட்டம், பதார்த்தத்தின் அளவு (செறிவு), ஒளிச் செறிவு என்பன அளவீட்டின் அடிப்படைக் கணியங்களாகும். ஏனைய கதி, வேகம், விசை போன்றவை அடிப்படைக் கணியங்களின் அடிப்படையில் பெறப்படும் துணையான அல்லது வழி வந்த கணியங்களாகும்.

அளவீ டுகள் எனும் போது அவ்வளவீடுகளுக்கு அலகு என்றொன்று அவசியமாகிறது. அலகு என்றால் அளவிட வேண்டிய கணியத்தின் ஓர் குறிப்பிட்ட அளவு ஓர் அலகாகும். அளவிட வேண்டிய பொருளானது அப்பெறுமானத்துடன் (ஓர் அலகுடன்) ஒப்பிடப்படுவதன் மூலம் மடங்குகள் பெறப்பட்டு அப்பொருளுக்கான அளவீடு நிர்னயிக்கப்படுகிறது.


அலகுகளை இரு வகையாக பிரிக்கலாம். எதேச்சையான அலகுகள், எழுந்தமான அலகுகள் என்பவையே அவையாகும். ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட அலகுகளே எதேச்சையான அலகுகளாகும். இன்றும் கூட இவற்றுள் சில பயன்பாட்டில் உள்ளது. உதாரணமாக நீளத்தை அளவிட உடலின் சில பாகங்களை ஆதிகள் பயன்படுத்தியுள்ளனர். 

கை விரல்கள் நன்கு விரிக்கப்பட்டுள்ள போது பெரு விரல் நுனியில் இருந்து சிறு விரல் நுனி வரை உள்ள தூரம் ஒரு "சாண்"  எனக் கருதாப்பட்டு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே போல கீழ்க் கையின் நீளத்தை "முழம்" எனக்கொண்டும், கால் பாதத்தின் அளவைப் பயன்படுத்தியும் அளவீடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை இன்றும் சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைய காலத்தில் வேட்டைக்காரர்கள் வேட்டையாடப்படும் விலங்குகள் உள்ள தூரத்தை தம்மிடையே பரிமாறிக்கொள்வதற்கு பல அளவீடுகளைப் பயன்படுத்தினர். இங்கிருந்துதான்  அளவீட்டின் பரிணாமம் ஆரம்பமாகிறது. அவர்கள் சிறிய தூரங்களை "பாதம்" எனும் அலகு மூலமும் பெரிய தூரங்களை "கூப்பிடு தூரம்", "காதம்" எனும் அலகுகள் மூலம் அளவிட்டுள்ளனர்.

எனினும் சாண், முழம், பாதம் போன்ற  அளவீடுகளில் நீளங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுவதால் நியமமான ஒரு அளக்கும் அலகு அவசியமாகியது.

பண்டைய அளவீடுகளின் அண்ணளவுப்ப் பெறுமானம் பின்வருமாறு அமையும்.


2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி 2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி 1 கூப்பீடு = 5500 அடி =1.04167 மைல் = 1.6763595 கி.மீ4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ4 காதம் = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

கி.பி.1101 ல்  முதலாவது ஹென்றி அரசனின் மூக்கிலிருந்து அரசனின் கைப் பெரு விரல் வரையான தூரமே "யார்" என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஹென்றி மன்னன் யார் அளவீடு 


பின்னர் முழு உலகத்தினதும் விஞ்ஞானிகளினதும் அங்கீகாரத்துடன் அடிப்படைப் பௌதீக கணியன்களை அளவிட நியமமான அளவீட்டு அலகுகளை தொகுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஒரு முறைமை உருவாக்கப்பட்டது. இது சர்வதேச அலகு  முறைமை (INTERNATIONAL SYSTEM OF UNITS) என அழைக்கப்பட்டது. இதனை SI UNITS எனவும் சுருக்கமாக அழைக்கலாம். இங்கு அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும்.

இது தொடர்பான தரவுகளை அடுத்த தொடரான பதிவில் பார்க்கலாம்

தொடரும்....

References- Science and Tecnology, Grade SIX
                  http://ezilnila.com/archives/1329
                  http://www.aukom-ev.de/english/elearning/01/einheiten_geschichte.htm

0 comments:

Post a Comment