02:08
0

முட்டையொன்றை வினாகிரி.திரவத்தில் அமிழ்த்தி இரண்டு நாட்களுக்கு வைக்கும் போது முட்டையின் வென்னிறமான தோலை (egg shell) வினாகிரி தனது இரசாயனத் தன்மையால் கரையச் செய்து விடும். 

முட்டையின் சுவர் அதிகமாக கல்சியம் காபேனற்றைக் கொண்டிருக்கிறது. இதுவே சுவரின் கடினத் தன்மைக்கு காரணமும் கூட..மேலும் இதனால் வினாகிரி அசட்டிக் அமிலம் எனும் பதார்த்தத்தையும் கொண்டிருக்கிறது. எனவேதான் முட்டையை வினாகிரியில் இட்டு வைக்கும் போது இரண்டு பதார்த்தங்களும் இரசாயனத்தாக்கத்திற்குட்பட்டு முட்டையின் சுவர் கரைக்கப்பட்டு வேடிக்கையான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே முட்டை மீழ் தன்மையுடையதாகிறது. இதனால் முட்டை ஜெலி / பழப்பாகு போன்று காட்சியளிக்கும். 

கொதிக்க / வேக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முட்டையுடன் வினாகிரியைக்கலந்து இரண்டு நாட்களுக்கு வைப்பின் முட்டையின் சுவர் கரைவதுடன் முட்டை இறப்பர் பந்து போன்று காட்சி தரும்.



0 comments:

Post a Comment