06:43
2
இன்று (06.01.2012) மாலை நாவலடி பிரதேசத்திற்கு நண்பரொருவருடன் சென்ற போது அருகில் இருந்த வயல் நிலத்தை பராமரிக்கும் விவசாயிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மொபைல் கமராவில் சுட்ட படங்களே இவை...

மாலையில் வயலை இல்லை தன் வாழ்வாதாரத்தை காக்கும் பணியில் விவசாயி ........

வயல் சுற்றி களைப்படைந்த விவசாயி தனது களைப்பை களிப்பாய் கழிக்கையில்......
இவரை அரவணைக்கும் வாடி எனப்படும் அரண்மனை.....

மாலை குளிரும், மழைக் குளிரும் தணிக்க நெருப்பை தயார் செய்கையில்....

 குளிருக்கு ஏதிரியாய் சுடர் விடக் காத்திருக்கும் நெருப்புத் தணல்...

இன்றைய இருளுக்கு துணையாக இருக்கப் போகும் அறிகம் லாம்பு...
இரவை அரவணைக்கும் இயற்கையால் ஆன கட்டில்.....
தயாராகும் வரை காத்திருக்கும் மானிடம்...
பகுதி நேரத்தில் தயாராகும் சேனைப் பயிர்...

யானைக் காவலுக்கு, தங்குமிடம்...

குளிரை விரட்டும் நெருப்பு...
நெருப்பை அணைக்கும் கொள்ளிகள் கட்டிலின் கீழ் லாவகமாக......

நெருப்புத் தணல் ஓய்வெடுக்கும் வரை ஓய்வெடுக்கும் விவசாயி ...
பசிக்கு பணி செய்யும் சாதனங்கள்.......

2 comments: