21:30
0
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றுபவரும் தனது கலாநிதிப் பட்டத்திற்காக வாவிகள் தொடர்பாகவும் வாவிகளை அண்டிய நீர்ப் பரப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவருமான ஜே.எம்.ஹரீஸ்அவர்களுடனான சந்திப்பின் போது அவர் எமது இணையதளத்துடன் பகிர்ந்து கொண்ட விடயங்களைத் தருகிறோம்.

தற்போது தங்களின் கலாநிதி பட்டத்திற்காக மீன் வளங்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் ஆய்வுகள் பற்றி கூறுங்கள்?

நான் செய்யும் ஆய்வுகள் வாவிகள் தொடர்பாகவும் வாவிகளை அண்டிய நீர்ப் பரப்புகள் தொடர்பானதாகும். இதில் நீரின் தர நியமங்களை பரிசோதனை செய்து மீன்கள், நண்டு, இறால், பிளாந்தன்கள் (Planktons) போன்றன எவ்வாறு நீர் மாதிரியின் தரத்தினால் பாதிக்கப்படுகிறது என்பது பற்றிய முடிவுகளை பெற்றுக்கொள்கிறோம். இதனால் மீனின் பரம்பல் எவ்வாறு நிர்ணைக்கப்படுகிறது என்பதை குறிப்பாக அறிந்து கொள்ள முடிவதோடு அது தொடர்பான கற்றலிலும் ஈடுபட முடிகிறது. பாதிப்பு எனும் போது மட்டக்களப்பு வாவில் 125 வகையான மீன்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதோடு அவற்றில் 25 வகையான மீன்கள் அருகிச் செல்லும் மீன் இனமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

மீன்கள் அருகிச் செல்வதாக குறிப்பிடுகிறீர்கள். இதற்கான காரணம் என்ன? 


மீன்கள் அருகிச் செல்வதற்கு நீர் மாசடைதல் பிரதான காரணமாகும். நீர் மாசடைவதில் மனித நடவடிக்கையே பிரதான பங்கு வகிக்கின்றது. உதரணமாக குப்பைகளை கொட்டுதுதல், முறையற்ற மீன்பிடி முறைகள், இயந்திரப் படகுகளின் அதிகரித்த பாவனை, வெடி வைத்து  மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தல், போன்ற மனித நடவடிக்கைகளை குரிப்பிடலாம். 

இற்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வாவியில் மீனவர் ஒருவரின் சராசரி மீன்பிடி அண்ணல்ளவாக 20 கிலோவாகும். எனினும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இடம்பெயர்ந்த மீனவர்கள், எதுவித புள்ளி விபரமுமின்றி அதிகளவு தோனிகள், வலைகள் விநியோகித்தமை மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களை வழங்கியதன் மூலம் மீன்களின் குடித்தொகை  குறைவடைந்து வருகிறது. அதாவது மீனவர் ஒருவரின் சராசரி மீன்பிடி குர்றைந்து வருகிறது.

சரியான ஆய்வுகள் இன்றி இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் மீன்பிடி பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டி இருக்கும். மட்டக்களப்பு வாவியில் சாதரணமாக 12860 முழு நேர மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர நேரடியற்ற முறையில் வலை பின்னுபவர்கள், கருவாடு காய வைக்கும் பெண்கள் என பலர் தொடர்புருகின்றனர். இதனால் இவர்களும் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

மனித சுகதாரதிற்கும் வாவிகள் தொடர்பான விஞ்ஞான அறிவிற்குமிடைலான தொடர்பு என்ன?

நீர் நிலைகளில் காணப்படுகின்ற தாவர, விலங்கு பிளாந்தன்களை மீன்கள் உண்கின்றன. சில வகையான பிளாந்தன்கள் நஞ்சுகளை சுரக்கின்றன. உதாரணமாக மட்டக்களப்பு வாவியில் நான்கு வகையான நஞ்சுகளை சுரக்கும் பிளாந்தன்களை அடையாளம் கண்டிருக்கிறோம். மீன்கள் இவ் வகை பிளாந்தன்களை உணவாக உட்கொள்ளும் போது மீனின் தசை மாதிரிகளில் நஞ்சு செறிவாக்கப்பட்டு உணவுச் சங்கிலியின் ஒவ்வெரு படி மட்டத்துக்கும் பல மடங்காக  அதன் செறிவு அதிகரித்துச் உயிரின செறிவாக்கல்  படிமுறையில், மனிதனுக்கு உடனடியான விளைவுகளை தோற்றுவிக்காவிடினும், எதிர்காலத்தில் விளைவுகளை தோற்றுவிக்கலாம்.

மேலும் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆய்வில் பார உலோகங்களின் (Heavy Metals) செறிவும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பார உலோகங்களில் ஆசனிக், ஈயம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறன பார உலோகங்களின் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அதிகரிக்குமாயின் பல பிறப்புரிமையியல் தொடர்பான நோய்கள் (Genetic-related diseases), நரம்பு மற்றும் சிறு நீரகம் தொடர்பான நோய்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமுள்ளது.

வாவிகள் தொடர்பான ஆய்வின் மூலம் இவ்வாறான பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. 

மீன்பிடி தொடர்பான ஆய்வின் மூலம் எவ் வகையான இலக்குகள் எதிர் பார்க்கப்படுகின்றன?

மட்டக்களப்பு வாவியைப் பொறுத்த வரையில் பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்துள்ளன. நாரா(NARA), மீன்பிடித் திணைக்களம், கிழக்குப் பல்கலைக்கழகம், NAQDA  போன்றவற்றை ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்துள்ள நிறுவனங்களாக கூறலாம். ஆனால் வாழைச்சேனை வாவியில் குறிப்பிடத்தக்களவான ஆராய்ச்சி இது வரை மேற்கொள்ளப் படவில்லை. இன்னும் எத்தனை வகையான மீன்கள் உண்டு என்பது பற்றிய சரியான ஆவணப்படுத்தலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான ஒரு ஆராய்ச்சியை மட்டக்களப்பு வாவியில் செய்வதன் மூலம் மீனவர்களுக்கு சிறந்த பயனை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென எதிர் பார்க்கப்படுகிறது.

இவ் ஆராய்சிகள் மூலம் மீனவர்கள் எந்தெந்த வகையான மீன்கள் எந்தெந்த காலப்பகுதிகளில் கிடைக்குமென்பதை அறிந்து கொள்ளமுடியும். உதாரணமாக சில மீன்கள் எல்லா இடங்களிலும் முட்டை, குஞ்சு இடுவதில்லை. அவற்றுக்கு சில குறிப்பிட்ட நீரின் தர நிபந்தனைகள் தேவைப்படும். நீரின் தர மாதிரியை பரிசோதிப்பதன் மூலமும் நீரின் தரத்தை பாதுகாப்பதன் மூலம் மீன் வளத்தை அதிகரிக்கச் செய்து கொள்ள முடியும். மேலும் மீன்கள் எவ் இடங்களுக்கு உணவு உண்ண வருகின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடியும். மீனவர்களிடம் இவ்விடயங்கள் தொடர்பான சரியான விழிப்புணர்வு இல்லை, சிறிய கண் வலைகளை பவித்தல், கருக் கட்டிய மீன்களை பிடித்தல், கண்டல் தாவாரங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் மீனினங்கள் அழியும் சாத்தியமுண்டு. இவ்வாறான விடயங்களில் விழிப்புணர்வுகளை வழங்குவதன் மூலம்எதிர்கால சந்ததிக்குரிய மீன்களை பாதுகாக்க முடியும்.

மட்டக்களப்பு வாவியில் இடம்பெறும் ஆய்வுகள் போன்று வாழைச்சேனை வாவியில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சத்தியம் பற்றி....

இவ்வாறான ஆய்வுகளை வாழைச்சேனை வாவிகளில் செய்வதாயின் வாவியின் பல இடங்களில் நீரின் தர மாதிரிகளைப் பெற வேண்டும். அவ்வாறான மாதிரிகளை சேகரிப்பதற்கு அந்தந்த இடங்களில் ஒருவர் உதவி செய்ய வேண்டும். மேலும் தொடர்ச்சியாக நீண்ட கால அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சேகரிக்க வேண்டும். சரியான தரவுகள் பெறப்படுவதொடு தகவல் தருபவரிடம் பொறுப்புணர்வும், நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும். பகுப்பாய்வு செய்வதாயின் ஆய்வுகூடத்திட்கே கொண்ட செல்ல வேண்டும்.  அடுத்த முக்கிய பிரச்சினை நிதி பற்றாக்குறை, இவ் ஆய்வுக்கு பயன்படுத்தும் வேதிப் பொருட்கள் விலை உயர்ந்தவை, மற்றயது என்ன வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன என்பது பற்றிய தரவுகளும் முக்கியமானவை. பிடிக்கப்படும் மீன்களின் மாதிரிகளும் தரப்பட வேண்டும். இவ் ஆய்வுக்கு நான்கு அல்லது, ஐந்து இலட்சங்கள் செலவாகும். இதற்கான பொருளாதார பங்களிப்பாளர்களை தேட வேண்டும்.

இந்த ஆய்வின் முடிவை கொண்டுதான் எதையும் குறிப்பாக உறுதியாக சொல்ல முடியம். இப்படித்தான் இருக்கும் எனக் கருதி ஆய்வு செய்ய முடியாது. முதலில் மீனவர்களுக்கு இது தொடர்பான விளக்கத்தை அளித்து அதன்பின்னரே அவர்களின் ஒத்துழைப்பை நாட முடியும். மீனவர்களிடத்தில் மீன்பிடி வளத்தைப் பெருக்க வேண்டுமென்பதில் ஆர்வம் இருக்குமானால் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும்

0 comments:

Post a Comment