12:18
1
என் வாழ்கையில் முதல் முறையாக கடந்த மே மாதம் சத்திர சிகிச்சை ஒன்றின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன்.

வலி என்பது துளியும் இல்லாமல் காலை ஏழு மணியளவில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு மாலை மூன்று மணி முப்பது நிமிடமளவில் சத்திர சிகிச்சை ஆரம்பமானது. அதுவரை உண்ணவோ பருகவோ அனுமதி வழங்கப்பட்டிருக்கப்படவில்லை.

முதுகை வளைக்க சொல்லி, நடுவில் உள்ள நீளமான எலும்பின் மத்தியில் ஊசி குத்திய பொழுது ஒரு பெரிய 'ஆ'சத்தம்.., சில நிமிடங்களில் இரண்டாவது ஊசியை அதற்கும் கீழே குத்தும் பொழுது, பென்சிலால் அழுத்திய உணர்வு. நொடிகள் கரைய கரைய.... தலை, கைகள் தவிர எல்லா பாகங்களுமே மரத்துப் போனது போல இருந்தது. 

உள்ளே ஊசி மூலம்ஏற்றப்பட்ட மருந்தில் நிம்மதியுடன் கண் அயர்ந்தேன்.அந்த நாள் முழுவதுமே, எழவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாமலும், கால் எங்கே இருக்கிறது என்பதை உணர முடியாமலும், சீரான இடைவெளிகளில் கொடுக்கப்பட்ட திரவ உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டுஇருந்தேன். 

இதன் ஊடே, என்னைப் பார்க்க வந்த உறவுகளும், நட்புகளுக்கும் புன்சிரிப்பை பதிலாக அளித்து, ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தேன். ஒரே மாதிரி கேள்விகள், ஒரே மாதிரி பதில்கள்தான் பெரும்பாலும், இருப்பினும், அலுக்கவில்லை.வலியை மறக்க செய்வதற்காக போடப்பட்ட ஊசி, 24 மணி நேரம் மட்டும் வேலை செய்யும் போல. 

மெது மெதுவாக, அடி வயிற்றுக்கு சற்று கீழ் தையல் போடப்பட்ட இடத்தில் வலி தெரிய ஆரம்பித்தது. கால்கள் இருகிறதா என உணர முடியாதிருந்த எனக்கு இப்பொழுதாவது கால்களை உணர முடிகிறதா என்று அசைத்துப் பார்த்தப் பொழுது, லேசாக அசைந்தன. வலி குறைய மீண்டும், ஊசி குத்தப்பட்டது. 

இதில், அந்த நேரத்தில் சளி, இருமலால் (Mild Cough) வேறு பாதிக்கப்பட்டு இருந்ததால், லேசாக இருமினாலே, தையல் பிரிந்து போவது மாதிரி, உயிர் போகும் வலி ஒரு புறம். எப்போ, இருமல் வருமோ என்று பயந்து கொண்டே இருந்ததாலோ என்னவோ, அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தேன். இரண்டாம் நாளில் தான், உட்கார முடிந்தது. மூன்றாம் நாளில், 7,8 அடிகள் எடுத்து வைத்து, நடக்க முடிந்தது. நான்காம் நாளில், யார் உதவியுமின்றியும், சுயமாக நடக்க முடிந்தது. 

வீட்டுக்கும் வந்தாகிவிட்டது.படிப்படியாக குறைந்த வலி, மறைந்து போனாலும், அந்த ஒரு மாதத்தில், லேசான, இருமலோ, தும்மலோ வந்தால், அப்பப்பா......ம்ம்... 

இவ்வளவையும் கடந்தால், உயிரின் ஒரு பகுதி தனியாய் உருவெடுத்து புன்னகைப்பதைப் பார்க்க முடியும்!
Next
This is the most recent post.
Older Post

1 comments: