09:40
0
கீறிஸ் பூதம்,மர்ம மனிதன் போன்ற வாசகங்கள் கடந்த சில வாரங்களாக நாடு பூராகவும் பிரபலயத்தையும அச்சத்தையும் இதனோடு சார்ந்த பல பிரச்சினைகளும் ஏற்படுத்திய வாசகங்களாகும்.

பெண்களின் இரத்தத்தை சிந்தி தனக்குத் தேவையான புதையலைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவொன்றினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கை என மக்கள் நம்புகின்றனர்.மேலும் இக் குழுக்கு தலைமை தாங்கும் நபர்கள் அரச தரப்பாக இருக்கக் கூடுமென்ற சந்தேகமும் நிலவுகிறது.

மக்களில் ஒரு சில சிந்தனை கூடியவர்கள் அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர் எனக் கருதுகின்றனர்.

இவ்வாறு மக்களின் கருத்து இருக்க பொலிஸ் மா அதிபர் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறுகிறார்.

இதன் உண்மை நிலைதான் என்ன?

சரி,பொலிஸ் மா அதிபரின் கூற்றுப் படி கஹவத்தையில் இடம்பெற்ற பெண்கள் கொலையைத் தொடர்ந்தே கிறிஸ் மனிதன் எனும் பெயர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தது என்கிறார். ஆனால் அதில் இருந்து இதுவரை நடந்த சம்பவங்களை நோக்கினால் அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

கஹவத்தைச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஈடுபடுகின்றனர் எனக் கூறுகிறார். அவ்வாறெனில் 

1.இவ்வாறு பிரதேசங்களில் காணப்படும் கயவர்ள் அனைவரும் ஒரே நேரத்தில் இவ்வாறு கிளம்புவார்களா?அதற்கு சில கால இடைவெளி எடுக்குமல்லவா?

2.அவ்வாறான நபர்கள் வேறுவகையான அதாவது ஒருவர் களவு,ஒருவர் சேஷ்டை என மல்டியாக செய்யாமல் இதுவரை நடந்த சம்பவங்கள் அனைத்திலும் கூறிய ஆயுதத்தினால் சேதப்படுத்தும் நிகழ்வுகளே இடம் பெற்றுள்ளன.ஏன் இவர்கள் ஒரே மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.?

3.ஏற்படுத்தும் காயங்கள் அணைத்தும் ஏற்கனவே திட்டமிட்டது போல் சிராய்ப்பு காயங்களாக ஒரே மாதிரியாக இருக்கின்றன.?

4.பொலிசார் ஏன் இவ்வாறு கைது செய்பவர்ள் அணைவரையும் தப்பிக்க வைக்கும் ஒரே மாதிரியான செயலில் ஈடுபட வேண்டும்?

5.மக்கள் கண்டதாக கூறும் அணைத்து கிறிஸ் பூதங்களும் ஒரே மாதிரியான தோற்றங்களில் எவ்வாறு தோன்ற முடியும்?

மேற்கூறிய அணைத்தும் இச் செயல்கள் அணைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட செயல்கள் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

எனினும் இப் பிரச்சினைகளுடன் சேர்ந்து இன நல்லூறவு பாதிக்கும் வாய்ப்பும்,காணபவர்களையெல்லாம் சந்தேகப்படும் மனநிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கூறுகையில் ஆட்சி நீடிக்கும் என்ற பேராசையில் துட்டகைமுனுவின் வாளைத் தேடிப் பெறவே இவ்வாறான நாசகார செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

அடுத்து பொலிஸார் நம்பகமான முறையிலும் நடந்து கொண்டால் மக்கள் இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக களத்தில் குதிக்கமாட்டார்கள்.அப்பாவிப் பொதுமக்களை சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள்.பொலிசாருக்கும் மக்களும் இடையிலான நல்லுறவு கட்டியெழுப்புவது அவசியமாகும். 

இவ்வாறு சம்பவங்கள் நடைபெறுகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது வெற்று அறிக்கைகள் விடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்?அடுத்து இதுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் கரிசணை எடுக்காதது வேதனை அளிக்கிறது.

மக்களின் பாதுகாப்பை மக்கள் உறுதிப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்களும் இராணுவத்தினரை குவிப்பதன் மூலம் மறுக்கப்படுகிறது.வைக்கோல் போரில் நாய் படுப்பது போன்று அவர்களும் செய்யமாட்டார்கள் செய்பவர்ளையும் விடமாட்டார்கள்.

அடுத்து மக்களாகிய எமக்கும் சில பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கின்றன.முதலில் வதந்திகளை பரப்புவதையும்,உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நபரும் தமது வீட்டு சூழலில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதற்கான சாதகங்களை நீக்கி முற்காப்பினை மேற்கொள்ள வேண்டும்.இதில் பெண்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளன.நிலமை சீராகும் வரை தேவை இல்லாமல் வெளியேறுவதைத் தவிர்த்து தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment