02:28
0
உலக நாடுகளிடையே சூழல் மாசடைதல் பிரச்சினைகள் தொடர்பாக பல மாநாடுகள் இடம்பெறுகின்றன. இம்மாநாடுகளில் சில தீர்மானங்கள் பெறப்படுகின்றன. இவை சில நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சில நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றன. இவ்வாறாக உலக நாடுகள் மாறி மாறி முடிவுகளில் உடன்பட மறுப்பதனால் புவியின் உயிரின இருப்புக்கு ஆதரமாக காணப்படும் உகந்த காலநிலைக்கு உலைவைக்கும் போக்கே தெளிவாக காணப்படுகிறது. மேலும் அரசுகளுடனான சமூகவலைகள் குறித்த ஒருமித்த கருத்தொருமைப்பாட்டினை எய்துவது மிகவும் கடினமான விடயமாகி உள்ளது. இதற்கு நாடுகளிற்கு இடையில் உள்ள பொருளாதார போட்டிகளும் நாடுகள் அணிசார்ந்து பிரிந்து நிற்பதும் சில நாடுகளின் அழுத்தங்களும் இதற்கு அடிப்படையாக உள்ளன.
சமூகக் கவலைகள் குறித்த கருத்தொருமைப்பாடுகள் உரிய தருனங்களில் எட்டப்படாவிடின் அவை பூதாகரமான விளைவுகளை தரும் என்பது தெளிவு.
இதற்காக ஐக்கிய நாடுகளும் அது சார்ந்த அமைப்புகளும் மாற்று வழிமுறைகளை கையாண்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சர்வதேச தினங்களை பிரகடனம் செய்து வருடந்தோறும் அனுசரித்து வருவது. இது மனித சமுதாயத்திற்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளின் தாக்கங்களை வலியுறுத்தி அதன்பால் கவனத்தை ஈர்க்கின்றது.

இவற்றில் ஒன்றுதான் செப்டம்பர்  16ம் திகதி ஓசோன் படை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது. தற்போது நாம் நேரடியாக உணர்ந்து வரும் புவி வெப்பமடைவதின் தீவிரத்திட்கும் ஓசோன் படை ஆற்றும் பணிக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 – 50 Km தூரத்தில் காணப்படும் வளிமண்டல படையில் ஓசோன் காணப்படுகிறது.
இதனது தாக்கப்பொரிமுறை சூரியனில் இருந்து கதிர்ப்பு வடிவில் வரும் சக்தியினை பெற்று வெப்ப சக்தியாக புவியிலிருந்து வெகு தூரத்திலேயே (திருப்பி சூரியனின் பக்கம் அனுப்பி விடுகின்றது) மாற்றி விடுகின்றது.
அவ்வெப்பம் கடத்தல் பொறிமுறை மூலம் புவியினை அடையும் சாத்தியம் குறைவாகும். காரணம் வளி ஓர் அரிதிட் கடத்தியாகும். இக்காரணத்தினால் அதிஉயர் சக்தி கொண்ட புற ஊதா கதிர்ப்புகள் புவி மேற்பரப்பினை அடைந்து புவி வெப்பத்தினை பெறுவது தடுக்கப்படுகிறது. இத்தாக்க சுற்று வட்டம் குளோரோ புளோரோ காபன் போன்ற சிற்சில சேர்வைகளால் குழப்பமடையும் போது இப்புற ஊதாக்கதிர்கள் நேரடியாக புவியினை அடைந்து அவற்றில் ஒரு பகுதி புவியிலிருந்து தெரிப்படைந்து மீண்டும் வான் வெளிக்கு திரும்பினாலும் பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் அவற்றின் வெப்ப சக்தியினை பெற்று வெப்பம் புவியிலிருந்து நீங்குவதை தடுக்கின்றன.
இக்காரணங்களினால் புவியின் வெப்பம் வருடா வருடம் அதிகரித்து செல்கின்றது.
மேற்குறிப்பிட்ட பொறிமுறைகளை உற்று நோக்குகையில் புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு குளோரோ புளோரோ காபன் மற்றும் பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றங்களை கட்டுபடுத்துவதன் அவசியம் எளிதில் புலனாகும்.
இப்புரிதல்களே சர்வதேச பொதுநல அமைப்புகளின் வேண்டுகோள்களாக அமைகின்றன. 1985 இல் பிரித்தானிய ஆய்வாளர்கள் ஆட்டிக் கண்டப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் ஓசோன் படையில் துவாரம் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. அதற்கான காரணங்கள் மற்றும் புவிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிவியல்அறிஞர்கள் விளக்கியதன் காரணமாக கருத்தொருமித்த “மொன்றியல் பிரகடனம்” ஏற்படக் காரணமாகியது. இது குளிரேட்டியில் பயன்படும் குளோரோ புளோரோ காபன் வகையின சேர்வைகளை முற்றாக தடை செய்யவும் மாற்றீடானவற்றை கண்டுபிடிக்கவும் வலி கோலியது.
இவ்வருட ஓசோன் தின தொனிப்பொருளாக “சூழலை பாதுகாப்போம்” என அமைந்து சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

0 comments:

Post a Comment